தென்காசி மாவட்டம் ஆய்க்குடியில் வளர்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொள்ள ரூ. 5.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய தமிழக அமைச்சர் கே. என். நேருவிடம் ஆய்க்குடி பேரூராட்சி மன்றத் தலைவர் சுந்தர்ராஜன் கோரிக்கை மனு அளித்தார். 15 வார்டுகளைக் கொண்ட இப்பேரூராட்சியில் 25 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். ஆய்க்குடி, கம்பிளி, அகரக்கட்டு, அனந்தபுரம் கிராமங்கள் உள்ள இப்பகுதி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நிதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.