குற்றாலம் மெயின் அருவி பராமரிப்பு பணி முடிக்க கோரிக்கை

1பார்த்தது
தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவி பகுதிகளில் சுற்றுலா வளர்ச்சித் துறை சார்பில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் சில தினங்களில் சீசன் துவங்க உள்ள நிலையில், பணிகள் மந்தகதியில் நடைபெறுவதால், சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். சீசன் காலத்தில் அருவியில் குளிக்க முடியாத நிலை ஏற்படலாம் என அஞ்சுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி