சுவீட் கடை உரிமையாளர் வீட்டில் ரூ. 30 லட்சம் நகை-பணம் கொள்ளை

0பார்த்தது
சுவீட் கடை உரிமையாளர் வீட்டில் ரூ. 30 லட்சம் நகை-பணம் கொள்ளை
தென்காசி மாவட்டம் கடையம் அருகே பொட்டல்புதூர் பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவர் ஆழ்வார்குறிச்சி பேருந்து நிறுத்தத்தில் ஸ்வீட் கடை நடத்தி வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்குச் சென்றிருந்தபோது, அவரது வீட்டின் முன்பக்கக் கதவு திறந்து கிடந்துள்ளது. வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த சுமார் 25 பவுன் தங்க நகைகள் மற்றும் 1 கிலோ வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி