பாவூா்சத்திரம் அருகே போக்ஸோவில் பள்ளி நிா்வாகி கைது

333பார்த்தது
பாவூா்சத்திரம் அருகே போக்ஸோவில் பள்ளி நிா்வாகி கைது
தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருகே அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளியில் 7 ஆம் வகுப்பு பயிலும் 12 வயது மாணவிக்கு பள்ளி தாளாளர் செல்வ சௌந்தர பாண்டியன் (62) பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் பேரில், ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தாளாளரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

தொடர்புடைய செய்தி