தென்குமரிக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில், குறிப்பாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. கனமழை எதிரொலியாக, நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் நாளை (24-11-2025) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.