தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் சங்கத்தின் சார்பில், கிராம உதவியாளர்களை முழுநேர பணியாளர்களாக அங்கீகரித்து டி கிரேடு ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டம் 3வது நாளாக நடைபெற்று வருகிறது. சனிக்கிழமையன்று, போராட்டக்காரர்கள் சமையல் செய்தும் தங்கள் போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.