ஆசிரியர் கொலை ஒரே குடும்பத்தில் மூவருக்கு 'ஆயுள்'

0பார்த்தது
ஆசிரியர் கொலை ஒரே குடும்பத்தில் மூவருக்கு 'ஆயுள்'
தென்காசி அருகே புல்லுக்காட்டு வலசை அரசு மேல்நிலை பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய சந்தோஷ் (36) என்பவரை, கள்ளக்காதல் உறவில் இருந்த பொன்செல்வி (36) மதுவில் விஷம் கலந்து கொலை செய்தார். கணவர் முருகன் அபுதாபியில் பணிபுரிந்த நிலையில், சந்தோஷுடன் ஏற்பட்ட நெருக்கம் வெளிப்பட்டுவிடும் என்ற அச்சத்தில் இந்த கொலையை செய்துள்ளார். பொன்செல்வி, அவரது தம்பி முருகன் (34), தந்தை தங்கபாண்டி (70) ஆகியோர் உதவியுடன் சந்தோஷின் உடலை வீட்டின் பின்புறம் குழி தோண்டி புதைத்துள்ளனர். இந்த வழக்கில், மூவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தென்காசி கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி மனோஜ்குமார் நேற்று தீர்ப்பளித்தார்.
Job Suitcase

Jobs near you