தென்காசி: ஸ்கேட்டிங் சாதனை மாணவர்களுக்குப் பாராட்டு விழா

77பார்த்தது
தென்காசி: ஸ்கேட்டிங் சாதனை மாணவர்களுக்குப் பாராட்டு விழா
தென்காசி மாவட்டம் பாவூர் சத்திரத்தில் குடியரசுத் தினத்தையொட்டி 76 நிமிடம் தொடர்ந்து ஸ்கேட்டிங், கராத்தே, யோகா செய்து சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்குப் பாராட்டு விழா நேற்று பாவூர் சத்திரத்தில் நடைபெற்றது. 

கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரி தலைமை வகித்தார். தொழிலதிபர் வைரசாமி, ஓய்வுபெற்ற ஆசிரியர் கோபு (எ) பத்மநாதன், டாக்டர் ஷோபனா சிரில் முன்னிலை வகித்தனர். பயிற்சியாளர் மாஸ்டர் கணேஷ் வரவேற்றார். காவல் உதவி ஆய்வாளர் பட்டமுத்து சாதனை படைத்த 35 மாணவ, மாணவிகளைப் பாராட்டி பதக்கம், சான்றிதழ் வழங்கினார்.

தொடர்புடைய செய்தி