தென்காசி பா. ஜ. , வினர் பிச்சை எடுத்து போராட்டம்

0பார்த்தது
தென்காசி பா. ஜ. , வினர் பிச்சை எடுத்து போராட்டம்
தென்காசி மாவட்டம் தென்காசியில் உள்ள கோவிலில், பசு மாடுகளுக்கு வைக்கோல் மற்றும் புல் இல்லாததால் அவை பட்டினி கிடப்பதாகக் கூறி, பாரதிய ஜனதா கட்சி ஆன்மிகம் மற்றும் கோவில் மேம்பாட்டுப் பிரிவினர், கோவில் முன்பு வைக்கோல் வாங்க பிச்சை எடுக்கும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்கள் வழங்கிய பிச்சை பணத்தைக் கொண்டு வைக்கோல் வாங்கி பசுக்களுக்கு உணவாக வழங்கினர். இக்கோவிலில் உள்ள பசு மாடுகள் முறையாகப் பராமரிக்கப்படவில்லை என பாஜகவினர் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி