தென்காசி: நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்

62பார்த்தது
தென்காசி: நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 20 பயனாளிகளுக்கு ரூ.5,000/- வீதம் மொத்தம் ரூ.1 லட்சம் மதிப்பிலான இலவச தையல் இயந்திரங்களையும், மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.4,000/- வீதம் மொத்தம் ரூ.20,000/- மதிப்பிலான எரிவாயு இலவச தேய்ப்பு பெட்டிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஏ.கே. கமல் கிஷோர் வழங்கினார்.

தொடர்புடைய செய்தி