தென்காசி: சாம்பவர்வடகரையில் சமுதாய வளைகாப்பு விழா

62பார்த்தது
தென்காசி: சாம்பவர்வடகரையில் சமுதாய வளைகாப்பு விழா
தென்காசி அருகே உள்ள சாம்ப வர்வடகரை பேரூராட்சி பகுதியில் சமுக நலன் மற்றும் மகளிர் துறை சார்பில் 120 கர்ப்பிணி களுக்கு வளைகாப்பு விழா நேற்று நடைபெற்றது.

இந்த விழாவிற்கு சாம்பவர்வடகரை பேரூராட்சி மன்ற தலைவர் சீதாலெட்சுமி முத்து தலைமை தாங்கினார். இந்த விழாவில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே. ஜெயபாலன் கலந்து கொண்டு கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் பயிர் வகைகள், பழங்கள், காய்கறிகள், சத்தான பலகார வகைகள் உள்பட சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.

பின்னர் அவர் பேசுகையில், 'திராவிட மாடல் அரசு அனைத்து மக்களுக்கான அரசாக செயல்ப டுகிறது. பெண்களை சமு தாயத்தில் தலை நிமிர்ந்து வாழ செய்ய திமுக. அரசு சொத்தில் பங்கு என்ற சட்டம், காவல் துறையில் பெண்கள், மாதந் தோறும் மகளிர் உரிமைத் தொகை, உயர்கல்வி படிக்கும் பெண்களுக்கு புதுமைப் பெண் திட்டம், விடியல் பயண திட்டம் என பல்வேறு திட்டங் களை செயல்படுத்தி வருகிறது' என்றார்.

இந்த விழாவில் சாம்பவர் வடகரை பேரூர் திமுக செயலாளர் முத்து, பேரூராட்சி துணைத் தலைவர் நாலாயிரம் பாப்பா. கவுன்சிலர்கள் சுடலை முத்து, ரபீக் ராஜா, குழந்தை வளர்ச்சி திட்டப் பணி அலுவலர் பர்கத்சுல்தானா, கண்காணிப்பாளர் சாகுல் ஹமீது, முன்னாள் பேரூர் திமுக செயலாளர் ராமச்சந்திரன், திமுக நிர்வாகிகள் விஜயகுமார், சந்திரன், முத்துக்குமார் உள் பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி