தென்காசி: சாலைப்புதூர் பள்ளிக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்

53பார்த்தது
தென்காசி: சாலைப்புதூர் பள்ளிக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்
பாவூர்சத்திரம் அருகே சாலைப்புதூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கிரெடிட் ஆக்சஸ் இந்தியா பவுண்டேசன் ஆலங்குளம் கிளையின் சார்பில் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

தலைமை ஆசிரியை சரோஜா வரவேற்றார். பள்ளிக்கு இரண்டு மேஜை, இரண்டு நாற்காலி, இரண்டு பீரோ, ஸ்டீல் ரேக் ஒன்று, இரண்டு பெஞ்ச், டெஸ்க், நான்கு வட்ட மேசை பதினாறு நாற்காலி, இரண்டு மின்விசிறி ஆகியவை வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் கீழப்பாவூர் பேரூராட்சி மன்ற தலைவர் பி. எம். எஸ். ராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 

கிரெடிட் ஆக்சஸ் இந்தியா பவுண்டேசன் பிராந்திய மேலாளர் பழனிக்குமார், பகுதி மேலாளர் குமாரதாஸ், கிளை மேலாளர்கள் சத்தியா, நித்யா, சந்தோஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி ஆசிரியை உச்சினிமாகாளி நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி