தென்காசி: விவசாயி மரணம்; இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

701பார்த்தது
தென்காசி: விவசாயி மரணம்; இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
சிவகிரியில் நிலப்பிரச்னை தொடர்பாக காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்ட அந்தோணிராஜ் (63), விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். காவல் ஆய்வாளர் முரளிதரன் தாக்கியதால் மரணம் அடைந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டி, உடலை வாங்க மறுத்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஆய்வாளர் முரளிதரன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு, தற்கொலைக்கு தூண்டியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், காவலர்கள் கனகராஜ், முத்துக்கண்ணன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி