தென்காசி மதுவிலக்கு காவல் நிலையத்தில் கஞ்சா விற்பனை மற்றும் ஆயுதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அச்சன்புதூர் பட்டாணியார் தெருவைச் சேர்ந்த மைதீன் பாட்சா என்பவரின் மகன் அபுபக்கர் சித்திக் (26) தொடர்ந்து கஞ்சா வியாபாரம் செய்து வந்தார்.
இதனால் அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் மாவட்ட ஆட்சியதிபதிக்கு பரிந்துரை செய்தார். இந்த பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் ஏ. கே. கமல் கிஷோர் உத்தரவின் பேரில் அபுபக்கர் சித்திக்கை போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.