தென்காசி: நகை கடைகாரரிடம் ரூ. 20. 77 லட்சம் மோசடி; 4 பேர் அதிரடி கைது

64பார்த்தது
தென்காசி: நகை கடைகாரரிடம் ரூ. 20. 77 லட்சம் மோசடி; 4 பேர் அதிரடி கைது
தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகேயுள்ள வடகரையை சேர்ந்தவர் ஜிந்தாமதார். இவர் இலத்தூர் காவல் நிலையத்தில் தன்னிடம் ஒருவர் தொடர்பு கொண்டு நகை வாங்கித் தருவது போல் நடித்து ரூ. 20.77 லட்சத்தை கொள்ளை அடித்து சென்றதாக புகார் கொடுத்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட இலத்தூர் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, குற்றம் சாட்டப்பட்டவரின் செல்போன் எண்ணை வைத்து அவரது இருப்பிடத்தை கண்டறிந்தனர். இதில் அந்த நபர் காரில் கேரளாவுக்கு சென்று கொண்டிருப்பது தெரியவந்தது. 

அவரை பின் தொடர்ந்து சென்ற தமிழக போலீசார், கேரளா போலீசார் உதவியுடன் பணத்தை கொள்ளை அடித்து சென்றவர்களின் காரை சுற்றி வளைத்து அந்த காரில் இருந்த 4 பேர்களை நேற்று கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களை இலத்தூர் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்த போது, தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா தாருகாபுரம் பகுதியை சேர்ந்த ராமர்பாண்டியின் மகன் கிருஷ்ணன் (வயது 30), செங்கோட்டை அருகே பூலாங்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த முகமது ஷரீப் என்பவரது மகன் நஸ்ருதீன் (வயது 31), மொய்தீன் பிச்சை மகன் ரியாஸ்கான் (வயது 22), அச்சன்புதூர் இஸ்மாயில் மகன் மீரான் (வயது 31) என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி