கோரிக்கை ஏற்பு; தென்காசி எம்எல்ஏ நன்றி தெரிவிப்பு

74பார்த்தது
கோரிக்கை ஏற்பு; தென்காசி எம்எல்ஏ நன்றி தெரிவிப்பு
தமிழக சட்டப்பேரவையில் 2025 - 26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில் இன்று கேள்வி நேரத்தில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ். பழனி நாடார் பேசினார். அப்போது அவர் பேசியதாவது: -தென்காசி மாவட்டத்தில் கூட்டுறவு பயிற்சி நிலையம் அமைக்க வேண்டும். இங்கு கூட்டுறவு பயிற்சி நிலையம் இல்லாததால் மாணவர்கள் 65 கி.மீ தூரம் சென்று நெல்லையில் படிக்க வேண்டியுள்ளது. 

மாணவர்கள் நலன் கருதி தென்காசியில் ஒரு அரசு கூட்டுறவு பயிற்சி நிலையம் அமைக்க வேண்டும். மேலும் தென்காசி மாவட்ட விவசாய பெருமக்களின் நலன் கருதி தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு அலுவலகம் அமைக்க வேண்டும்' என்றார். இதற்கு பதிலளித்த தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் பேசியதாவது: - தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பழனி நாடார் கோரிக்கையின்படி மாணவர்கள் மற்றும் விவசாயிகளின் நலன் கருதி அரசு கூட்டுறவு பயிற்சி துணை நிலையம் மற்றும் தமிழ்நாடு கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு அலுவலகம் அமைக்க விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என உறுதி அளித்தார். இதனை அடுத்து பேசிய எம்எல்ஏ பழனி நாடார் முதலமைச்சருக்கும், அமைச்சருக்கும், அரசுக்கும் நன்றி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி