தென்காசி: ராமநதி அணையில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு

273பார்த்தது
தென்காசி: ராமநதி அணையில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு
தென்காசி மாவட்டம், ராமநதி நீர்த்தேக்கத்திலிருந்து 07.11.2025 முதல் 31.03.2026 வரை 145 நாட்களுக்கு, நீர் இருப்பைப் பொறுத்து வினாடிக்கு 60 கன அடி வீதம் 823.91 மில்லியன் கன அடிக்கு மிகாமல் நீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால் தென்காசி வட்டம், கடையம், மேலக்கடையம், கோவிந்தப்பேரி, ஆழ்வார்குறிச்சி, வாகைக்குளம், பொட்டல்புதூர், அயன்பொட்டல்புதூர், ரவணசமுத்திரம், பாப்பன்குளம் கிராமங்களில் உள்ள 4,943.51 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.