தென்காசி வனக் கோட்டத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான புலிகள் கணக்கெடுப்பு பயிற்சி குற்றாலம் வன ஓய்வு விடுதியில் நடைபெற்றது. மாவட்ட வன அலுவலா் ராஜ்மோகன் தலைமையில் நடைபெற்ற இந்தப் பயிற்சியில், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக உயிரியலாளா் ஸ்ரீதா் மற்றும் தென்காசி வனக் கோட்ட உயிரியலாளா் கந்தசாமி ஆகியோர் புலிகள் கணக்கெடுப்பு முறைகள் குறித்து பயிற்சி அளித்தனர். 126 வனப் பணியாளர்கள் கலந்துகொண்ட இந்தப் பயிற்சியில், மாமிச உண்ணிகள், தாவர உண்ணிகள் மற்றும் தாவர இனங்கள் கண்டறியும் முறைகள் கற்றுத்தரப்பட்டன. இந்தப் பயிற்சி ஙள்ற்ழ்ண்ல் அல்ல் மூலம் குற்றாலம், கடையநல்லூர், புளியங்குடி, சிவகிரி வனச்சரகங்களில் நடைபெறுகிறது.