தென்காசி மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி மற்றும் சட்டக் கல்லூரி அமைக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்துள்ளனர். தென்காசி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கலைகதிரவனிடம் கட்சி நிர்வாகிகள் அபாபீல் மைதீன், நைனார் முஹம்மது, சலீம் ஆகியோர் இந்த மனுவை அளித்தனர். மேலும், தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைத் திறந்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்றும், நகரில் வசிக்கும் முஸ்லிம்களின் நீண்ட நாள் கோரிக்கையான பொது அடக்க ஸ்தலம் அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.