அரசு நிலத்தை, விற்று மோசடி செய்த வி. சி. க, நிர்வாகியை கைது

0பார்த்தது
அரசு நிலத்தை, விற்று மோசடி செய்த வி. சி. க, நிர்வாகியை கைது
தென்காசி மாவட்டம் தென்காசியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணை செயலர் ரீகன்குமார், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவர், தென்காசி ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள அரசு நிலத்தை, தனது நிலம் எனக்கூறி கோதர்மைதீன் என்பவரிடம் 30 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். ஆனால், இரண்டு ஆண்டுகளாக பத்திரப்பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தியுள்ளார். விசாரணையில் அந்த நிலம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்துக்கு சொந்தமானது என்பதும், இதேபோல் பலரை ஏமாற்றி இருப்பதும் தெரியவந்தது. எஸ். பி. மாதவன் உத்தரவின் பேரில், தென்காசி போலீசார் ரீகன்குமாரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி