தென்காசி மாவட்டம் தென்காசியில் ஆண்களுக்கான நவீன வாசக்டமி இருவார விழாவை முன்னிட்டு வாகன விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் சீ. ஜெயச்சந்திரன் தலைமை வகித்து பிரச்சார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட இணை இயக்குநர் (நலப்பணிகள்) போ. பிரேமலதா, குடும்ப நலத் துணை இயக்குநர் லதா, மாவட்ட சுகாதார அலுவலர் கோவிந்தன், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின், ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டப் பணிகள் திட்ட அலுவலர் மாரியப்பன், சிறப்பு மருத்துவர் சொர்ணலதா, திருநெல்வேலி மாவட்ட குடும்ப நலத்துறை சார்ந்த மக்கள் கல்வி தகவல் அலுவலர் (பொ) செந்தில்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.