வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் விழிப்புணர்வு

308பார்த்தது
தென்காசி மாவட்டத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் நடைபெற்று வருகிறது. இதையொட்டி, மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் தலைமையில், மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த சுமார் 200 பெண்கள் பங்கேற்ற விழிப்புணர்வுப் பேரணி இன்று காலை 10.30 மணியளவில் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து புறப்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. 'SIR-ல் பங்கு பெறுவோம் ஜனநாயகத்தை வலுப்படுத்துவோம்' என்ற முழக்கத்துடன் நடைபெற்ற இந்தப் பேரணியில், சார் ஆட்சியர் வைஷ்ணவி பால் பொதுமக்களுக்கு விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்களை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி