தென்காசி மாவட்டத்தில் 507 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

0பார்த்தது
தென்காசி மாவட்டத்தில் 507 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
தென்காசி மாவட்டத்தில் ரூ. 6 கோடி மதிப்பில் பல்வேறு முடிவுற்ற திட்டப்பணிகள் திறப்பு விழா, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. தென்காசி இ. சி. ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவிற்கு, தமிழக வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே. கே. எஸ். எஸ். ஆா். ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் ரூ. 2. 75 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தாா். மேலும், ரூ. 3. 19 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினாா்.

தொடர்புடைய செய்தி