தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள தோரணமலை முருகன் கோயிலில் உலக நன்மைக்காக 27 நட்சத்திர மரங்களுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. 27 பெண்கள் தீர்த்த குடங்கள் எடுத்து வந்து பூஜையில் பங்கேற்றனர். சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் மலர் தூவி வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து சூரிய பகவானுக்கு பொங்கல் வைத்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. நடிகர்கள் முத்துக்காளை, கிங்காங் ஆகியோரும் பக்தர்களுடன் கலந்து கொண்டனர். கோயில் அறங்காவலர் செண்பகராமன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.