தென்காசியில் அரசு வழக்கறிஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு

574பார்த்தது
தென்காசி மாவட்டம் செங்கோட்டை நீதிமன்ற அரசு வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி, தனது அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, பிற்பகல் இரண்டு மர்ம நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்து, அவர் மீது சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலைவெறி தாக்குதல் நடத்தினர். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த காவல்துறையினர், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தென்காசி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.