தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே புளியங்குடி மேலமந்தை பகுதியைச் சேர்ந்தவர் சேகு மைதீன் (60). அவரது வீட்டில் மாடுகளை வளர்த்து பால் வியாபாரம் செய்து வந்தார். இதில் மாடுகளுக்கு புல் அறுக்க வெளியே சென்ற அவர் இரவு வரை வீடு திரும்பவில்லை.
பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது உறவினர்கள் புளியங்குடி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். புளியங்குடி போலீசார் வழக்குப் பதிந்து தேடிவந்தனர். அப்போது, புளியங்குடி சங்கரன்கோவில் சாலையில் உள்ள தோட்டத்தில் சேகு மைதீன் இறந்து கிடந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் அவரின் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.