தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே குலசேகரன்கோட்டை கிராமத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தென்காசி திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் ஈ. ராஜா ஈஸ்வரன், வழக்கறிஞர் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஆணைக்கிணங்க கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர் பொதுமக்களுக்கு எம்எல்ஏ இனிப்பு வழங்கி பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு, பேனா, பென்சில் வழங்கினார். இந்த ஏற்பாடுகளை குலசேகரன்கோட்டை திமுக கிளைச் செயலாளர் திருப்பதி தலைமையில் செய்திருந்தார் இந்த நிகழ்ச்சியில் ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.