தென்காசி பகுதியில், நான்கு சக்கர வாகனத்தின் டிக்கியில் இரண்டு இளைஞர்கள் அமர்ந்து பயணம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாதவன் உத்தரவிட்டார். போக்குவரத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி, வாடகை வாகனத்தின் மீது வழக்குப்பதிவு செய்து, வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.