தென்காசி மாவட்டம் சிவகிரி பேட்டை தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன் (40). விவசாயியான இவர் ராசிங்கப்பேரி கண்மாய் பகுதியில் நெல் நாற்று நடவு பணியை முடித்து விட்டு அவரது மாட்டு வண்டியில் வைக்கோல் ஏற்றிக் கொண்டு தென்காசி -மதுரை தேசிய நெடுஞ்சாலை வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையைச் சேர்ந்த யுவராஜ் (36) ஓட்டிய வந்த லாரி மாட்டு வண்டியில் மோதியதாம். இதில், காயமடைந்த மாரியப்பன் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவ்விபத்தில் ஒரு மாடு இறந்தது. மற்றொரு மாடு பலத்த காயமடைந்தது. இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.