தென்காசி மாவட்டம் திருவேங்கடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மக்காச்சோளம் அறுவடை செய்து வருகின்றனர் இந்த நிலையில் கடந்த முறை மக்காச்சோளம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 3, 000 வரை கொள்முதல் செய்யப்பட்டது. இதனால் இந்த ஆண்டு குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2500-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது மழை பெய்து ஈரப்பதம் அதிகரித்ததால் மேலும் ரூ. 200 விலை குறைந்து, குவிண்டாலுக்கு ரூ. 2, 300-க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனா்.
நன்கு காய வைக்கப்பட்ட மக்காச்சோளம் ரூ. 2, 400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. எதிா்பாராத விலை சரிவால் இழப்பை சந்தித்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.