சிவகிரியில் ரூ. 1. 28 கோடியில் எரிவாயு தகன மேடை திறப்பு

66பார்த்தது
சிவகிரியில் ரூ. 1. 28 கோடியில் எரிவாயு தகன மேடை திறப்பு
தென்காசி மாவட்டம், சிவகிரி பேரூராட்சியில் ரூ. 1.28 கோடியில் அமைக்கப்பட்ட எரிவாயு தகன மேடை திறப்பு விழா நடைபெற்றது. கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2022-2023 இன் மூலம் அமைக்கப்பட்ட எரிவாயு தகனமேடையை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். 

இதைத் தொடர்ந்து எரிவாயு தகன மேடை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பேரூராட்சி தலைவர் கோமதி சங்கரி தலைமை வகித்தார். துணைத் தலைவர் லட்சுமி ராமன் முன்னிலை வகித்தார். பேரூராட்சி நிர்வாக அலுவலர் வெங்கடகோபு வரவேற்றார். வாசுதேவநல்லூர் ஒன்றியக் குழுத் தலைவர் பொன். முத்தையாபாண்டியன் விளக்கேற்றினார். இதில், திமுக மாநில மருத்துவரணி துணைச் செயலர் டாக்டர் செண்பக விநாயகம், மாவட்ட துணைச் செயலர் மனோகரன், நகரச் செயலர் சேது சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி