தென்காசியில் வெளுத்து வாங்கிய கனமழை (VIDEO)

52பார்த்தது
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தன் சுற்றுவட்டார பகுதியில் சுமார் நேற்று மாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக எளிதாக கனமழை பெய்தது. வாசுதேவநல்லூர் பேரூராட்சி உட்பட்ட கீழ்பஜார் பகுதி சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால் தண்ணீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. மேலும் இந்தப் பகுதி வழியாக பள்ளி மாணவர்கள், முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் செல்ல முடியாமல் மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள். கடந்த நாட்களில் பெய்த மழையினால் இந்தப் பகுதி பாதிப்பானபோது மாவட்ட நிர்வாகத்திடமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் இதுகுறித்து தகவல் அளிக்கப்பட்டும், இந்தப் பகுதியை கண்டுகொள்ளாததால் தற்போது பெய்த மழைக்கு அந்தப் பகுதி முழுவதும் மழைநீரால் சூழப்பட்டுள்ளது. மேலும் இந்தப் பகுதியில் தேங்கிய மழைநீரை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுத்தால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைவார்கள்.

தொடர்புடைய செய்தி