கடையநல்லூர்: சிங்கப்பூரில் இருந்து வந்த இளைஞர் விபத்தில் பலி

0பார்த்தது
கடையநல்லூர்: சிங்கப்பூரில் இருந்து வந்த இளைஞர் விபத்தில் பலி
கடையநல்லூர் அருகே தங்கப்பாண்டி (28) என்பவர், சிங்கப்பூரில் பணிபுரிந்து ஒரு மாதத்திற்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துள்ளார். வியாழக்கிழமை இரவு, தென்காசி மலையான் தெருவில் உள்ள பாட்டி வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, துரைச்சாமிபுரம் பகுதியில் மதுரை-தென்காசி தேசிய நெடுஞ்சாலையில், எதிர்திசையில் வந்த கார் மோதி தங்கப்பாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இலத்தூர் போலீஸார் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்து, வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி