தேசிய இயற்கை மருத்துவ விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

0பார்த்தது
தேசிய இயற்கை மருத்துவ விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் உள்ள தங்கப்பழம் இயற்கை மற்றும் யோகா மருத்துவக்கல்லூரி, 8-வது தேசிய இயற்கை மருத்துவ தினத்தை முன்னிட்டு இயற்கை மருத்துவ விழிப்புணர்வு பேரணியை நடத்தியது. புளியங்குடி காவல் கண்காணிப்பாளர் டி.எஸ்.பி மீனாட்சி நாதன் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். டாக்டர் இரத்தனபிரகாஷ் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி