யானைகளை வனத்துக்குள் விரட்ட பாதைகளை உருவாக்கத் திட்டம்

0பார்த்தது
யானைகளை வனத்துக்குள் விரட்ட பாதைகளை உருவாக்கத் திட்டம்
தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டார விளைநிலங்களில் பயிர்களைச் சேதப்படுத்தும் யானைகளை வனத்துக்குள் விரட்ட வசதியான பாதைகளை அமைப்பதற்கான இடங்களை அதிகாரிகள் திங்கள்கிழமை பார்வையிட்டனர். சிவகிரி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள விவசாய நிலங்களில் யானைகள் முகாமிட்டு கரும்பு, வாழை, நெல், தென்னை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. விவசாயிகள் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து, வனத்துறையினர் ட்ரோன் கேமராக்கள் மூலம் ஆய்வு செய்தனர். தற்போது, விவசாய நிலப்பகுதி வழியாக வனப் பகுதிக்கு பாதை அமைப்பது குறித்து வனத்துறையினர், விவசாயிகள், பொதுப்பணித் துறையினர், வருவாய்த் துறையினர் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

தொடர்புடைய செய்தி