தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மருகாலங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் ராஜா (28). இவரது மனைவி கவிதா (24) கர்ப்பிணி. சென்னையில் வேலை பார்த்து வந்த கார்த்திக் ராஜா தற்போது ஊரில் வேலைக்குச் செல்லாமல் மது அருந்திக் கொண்டே இருந்துள்ளார்.
இதனால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து அவரது மனைவி கவிதா வீட்டில் இருந்த நேரத்தில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த போலீசார் உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஊத்துமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.