தென்காசி: கல்வி மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன

85பார்த்தது
இலஞ்சியில் உள்ள டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரியில் கல்லூரி தின விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி தாளாளர் ராஜகுமார் தலைமை வகித்தார். சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரி தமிழ்துறை தலைவர் திருநாவுக்கரசு, கல்வி மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரி சிறந்த கல்லூரியாக செயல்படுகிறது என அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி