தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே உள்ள சுப்பையாபுரத்தை சேர்ந்தவர் செந்தில் காங்கிரஸ் பிரமுகரான இவருக்கு சொந்தமான ஆட்டோவில் பயணம் செய்த பெண் பயனி ஒருவர் தங்க கைசெயினை தவறவிட்டு விட்டார். இதனை பார்த்த செந்தில் செயினுக்கு உரியவரை கண்டுபிடித்து நகர காங்கிரஸ் தலைவர் எஸ்கேடி. ஜெயபால் முன்னிலையில் உரியவரிடம் வழங்கினார். உடன் ஏகேஎஸ் பிரபு உள்ளிட்ட பலர் இருந்தனர். அவரை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.