தென்காசி: தவறவிட்ட தங்கச்சங்கிலி உரியவரிடம் ஒப்படைப்பு

64பார்த்தது
தென்காசி: தவறவிட்ட தங்கச்சங்கிலி உரியவரிடம் ஒப்படைப்பு
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வரும் சுடலைகண்ணு பணி நிமித்தமாக தென்காசி வந்துவிட்டு மீண்டும் வாசுதேவநல்லூர் செல்லும் வேலையில் தென்காசியில் உள்ள ஒரு டீக்கடைக்குச் சென்றபோது அங்கு கீழே தங்கச் செயின் ஒன்று கிடந்துள்ளது. 

அதனை எடுத்த தலைமைக் காவலர் செயின் உரிமையாளர், "இங்கே வந்தால் எனது எண்ணில் தொடர்புகொள்ள கூறுங்கள்" என்று கடையின் உரிமையாளரிடம் கூறிவிட்டு வந்துள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து செயினை தவறவிட்டவர்கள் வந்தவுடன் அவர்களை மாவட்ட காவல் அலுவலகம் அழைத்து எஸ்பி எஸ்.அரவிந்த் அறிவுறுத்தலின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சங்கர் முன்னிலையில் உரிமையாளரிடம் தங்கச் செயின் ஒப்படைக்கப்பட்டது. 

செயினை பெற்றுக்கொண்ட அதன் உரிமையாளர் காவலருக்கு தனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார். பின்னர் நேர்மையான முறையில் கீழே கிடந்த தங்கச் செயினை உரிய நபரிடம் ஒப்படைத்த தலைமைக் காவலரை பாராட்டும் விதமாக அவருக்குச் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி