சுரண்டையில் விபத்தில் வியாபாரி உயிரிழப்பு

800பார்த்தது
சுரண்டையில் விபத்தில் வியாபாரி உயிரிழப்பு
தென்காசி மாவட்டம் கடையம் அருகே சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த ராஜசேகரன் (47) என்பவர், சுரண்டை பகுதியில் நெல்லிக்காய் வியாபாரம் செய்து வந்தார். நெல்லித் தோப்பைப் பார்ப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சுரண்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, வீ.கே.புதூர் அருகே கேஸ் சிலிண்டர் ஏற்றிச் சென்ற லாரியை முந்திச் செல்ல முயன்றார். அப்போது எதிரே வந்த கார் மீது மோதி தூக்கி வீசப்பட்டதில் ராஜசேகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.