தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சுரண்டையில் இருந்து வீரகேரளம்புதூருக்கு நேற்று (வெள்ளி) காலை சென்ற லோடு ஆட்டோ, இலந்தை குளம் கரையில் கட்டுப்பாட்டை இழந்து வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.