தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் கோடாங்கி தெருவைச் சோ்ந்த சொரிமுத்து(58) என்ற இரவுநேர காவலாளி, தென்காசி- மதுரை சாலையில் பழக்கடையில் பணிபுரிந்து வந்தாா். வியாழக்கிழமை இரவு அப்பகுதியில் சென்றபோது சாலையோரம் மயங்கி விழுந்த நிலையில், அவ்வழியாக வந்த வாகனம் அவா் மீது மோதிவிட்டு தப்பிச் சென்றது. புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவா் உயிரிழந்ததாக மருத்துவா்கள் பரிசோதனையில் தெரியவந்தது. இதுகுறித்து வாசுதேவநல்லூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.