சிவகிரி அருகே பனை மரத்தை சாய்த்த காட்டு யானை

1பார்த்தது
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே கோம்பையாறு பகுதிக்கு வந்த ஒற்றை யானை ஒன்று, வாய்க்காலில் வந்த தண்ணீரை பீச்சி அடித்து விளையாடியது. அப்போது, அந்தப் பகுதியில் நின்ற ஒற்றைப் பனை மரத்தை வேரோடு பிடுங்க முயன்று, பின்னர் அதை முட்டித் தள்ளியது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. யானைகளால் விவசாயப் பகுதிக்கு பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி, வனத்துறையினர் காட்டு யானைகளை விரட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி