தென்காசி: பைக்கிலிருந்து விழுந்து காயமடைந்த பெண் உயிரிழப்பு

315பார்த்தது
தென்காசி: பைக்கிலிருந்து விழுந்து காயமடைந்த பெண் உயிரிழப்பு
மேல கடையநல்லூா் கற்பக விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த சக்திவேல் மற்றும் அவரது மனைவி மகேஸ்வரி (55) புதன்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா். அப்போது, சாம்பவா் வடகரை அருகே இருசக்கர வாகனம் நிலைதடுமாறி விழுந்ததில் தம்பதி பலத்த காயமடைந்தனா். பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மகேஸ்வரி நேற்று அதிகாலை உயிரிழந்தாா். இதுகுறித்து சுரண்டை போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தொடர்புடைய செய்தி