தென்காசி: குடிநீர் தட்டுப்பாடு; காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகை

374பார்த்தது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே புது சுப்புலாபுரம் கிராமத்தில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக குடிநீர் வழங்கப்படாததால், அடிப்படை வசதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என கூறப்படுகிறது. 

இதனால் ஆத்திரமடைந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள், பொதுமக்கள் காலி குடங்களுடன் காரிச்சாத்தான் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு கலைந்து சென்றனர்.