ஆலங்குளம்: கோயிலுக்கு வந்த தொழிலாளி கிணற்றில் விழுந்து உயிரிழப்பு

408பார்த்தது
ஆலங்குளம்: கோயிலுக்கு வந்த தொழிலாளி கிணற்றில் விழுந்து உயிரிழப்பு
ஆலங்குளம் அருகே காளத்திமடம் கிராமத்தைச் சேர்ந்த காமராஜ் (52) திருவிழாவுக்காக சொந்த ஊர் வந்திருந்தார். சனிக்கிழமை வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பாததால் உறவினர்கள் தேடினர். கிணற்றில் தவறி விழுந்திருக்கலாம் என சந்தேகமடைந்த உறவினர்கள் அளித்த தகவலின் பேரில், கடையம் போலீஸார் மற்றும் ஆலங்குளம் தீயணைப்பு மீட்புப் படையினர் கிணற்றில் இறங்கி தேடியபோது, காமராஜ் நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது. சடலத்தை மீட்ட போலீஸார், பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி