தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே வள்ளியம்மாள்புரம் நடுத்தெருவைச் சேர்ந்த சுதாகர் (24) என்பவர், கடையநல்லூரிலிருந்து வள்ளியம்மாள்புரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அச்சம்பட்டியில் எதிரே வந்த ஆம்னி பேருந்து அவர் மீது மோதியதில் படுகாயமடைந்த சுதாகர், தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து கடையநல்லூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.