இஸ்ரேல் தாக்குதலால் ஈரானில் பதற்றம் நிலவும் நிலையில், அங்குள்ள தமிழர்களின் பாதுகாப்பிற்காக தமிழ்நாடு அரசு அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது. பாதிப்பிற்குள்ளான தமிழர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் 1800 309 3793, +91 8069009901, 08069009901 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு உதவிகளை பெறலாம். தாயகம் திரும்ப விரும்புபவர்களை பாதுகாப்பாக மீட்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.