விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே இன்று (நவ.10) சாலைத் தடுப்பில் கார் மோதி கோர விபத்து ஏற்பட்டது. இதில் காரில் பயணித்த 4 இளைஞர்கள் படுகாயமடைந்தனர். ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நல்வாய்ப்பாக காரில் ஏர் பேக் இருந்ததால் இளைஞர் உயிர் தப்பினர். தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.