சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கூராண்டி புதூரில் லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 2 ஓட்டுநர்கள் படுகாயமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், லாரியில் சிக்கிக்கொண்ட ஓட்டுநர்களை பொக்லைன் இயந்திரம் மூலம் தீயணைப்புத்துறையினர் மீட்டனர். லாரிகள் மோதிக்கொண்ட விபத்து காரணமாக ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.